தினசரி கொரோனா பாதிப்பில் 68% கேரளாவில் இருந்து பதிவு!

இந்தியாவில் பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பில் 68சதவீத பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தற்போது சுமார் 2 லட்சம் பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் 64 மாவட்டங்களில் 5 சதவீதத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ளதாகத் தெரிவித்த அவர் அந்த மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 3 ஆயிரத்து631 பிஎஸ்ஏ இயந்திரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இதன்மூலம் 4500 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.