7 வகையான சாதனைகளை செய்து அசத்திய சிறுவன்!

பானை மீது நின்று கண்ணை கட்டிக்கொண்டு 5 நிமிடத்தில் 7  வகையான சாதனைகளை செய்து அசத்திய  9 வயது சிறுவன்

மதுரவாயல் பகுதியை  சேர்ந்த ஜஸ்வந்த் என்ற 9 வயதான சிறுவன், அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் சிறு வயது முதலே அபாகஸ் கணித முறை மற்றும் பானை மீது நின்று இடுப்பில் வளையம் சுற்றுவது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்ய பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில் அவர் ஒரே நேரத்தில் ஐந்து நிமிடத்தில் 7 வகையான சாதனைகளை புரிந்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

குறிப்பாக இந்த சாதனையில் கன்னை கட்டிக்கொண்டு பானை மீது நின்று கொண்டு இடுப்பில் ஒரு வளையம், ஒரு கையில் மற்றொரு வளையம் ஒற்றை கையில் க்யூப்பை சரி செய்வது மேலும் அங்கு நின்றிருக்கும் நபர்கள் கேட்கும் கணித புதிருக்கு உடனே விடையை அளிப்பது எனவும் இதிலும் ஒற்றை கையில் இரண்டு கியூபை சரி செய்வது விதவிதமான வலயங்களை இடுப்பு மற்றும் கையில் வைத்து சுழற்றுவது கடினமான கணித புதிருக்கு விடை அளிப்பது என அனைத்தையும் கண்ணை கட்டிக் கொண்டு ஐந்து நிமிடத்தில் 7 வகையான உலக சாதனைகளை புரிந்து சாதனை படைத்துள்ளார்.  

இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கர்ட் அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி உள்ளது. தற்போது ஐந்து நிமிடத்தில் சிறுவன் ஏழு வகையான சாதனைகளை புரிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..