குஜராத்தை சேர்ந்த முதியவருக்கு அரிய ரத்த வகை கண்டுபிடிப்பு..!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அரிய ரத்த வகையான EMM நெகட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ரத்த வகை கொண்ட, இந்தியாவின் முதல் நபராகவும், உலகின் 10 - வது நபராகவும் உள்ளார்.

குஜராத்தை சேர்ந்த முதியவருக்கு அரிய ரத்த வகை கண்டுபிடிப்பு..!

மனித உடலில் A, B, O, Rh மற்றும் Duffy உட்பட 42 வகையான இரத்த அமைப்புக்கள் உள்ளன. பொதுவாக, A ,B ,O ,AB என்ற நான்கு வகையான இரத்தக் குழுக்கள் உள்ளன. இதில் O நெகட்டிவ் ரத்த பிரிவு யூனிவெர்சல் டோனர் ஆகும். அதாவது அனைத்து வகை ரத்த பிரிவினருக்கும்,O நெகட்டிவ் ரத்த பிரிவினர் ரத்தம் கொடுக்க முடியும். 

இந்நிலையில் தற்போது அறிய ரத்த வகை கொண்டவரை கண்டுபிடித்துள்ளனர். குஜராத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவருக்கு அரிய இரத்த வகை EMM நெகட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது, இதனை மற்ற நான்கு இரத்த வகைகளாக (A, B, O, அல்லது AB) வகைப்படுத்த முடியாது. 375 வெவ்வேறு வகையான ஆன்டிஜென்களிலும் EMM அதிக அளவில் உள்ளது.

இந்த மிகவும் அரிதான இரத்த வகைகளைக் கொண்டவர்கள், மற்றவர்களிடம் இருந்து இரத்தத்தை பெறவும், தானம் செய்யவும் முடியாது. இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 9 நபர்களுக்கு மட்டுமே இந்த அரிதான இரத்த வகை உள்ளது. ஆனால் தற்போது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு இந்த ரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டு அகமதாபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டது என மருத்துவர்  தெரிவித்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் அவரது இரத்த வகையை அடையாளம் காண முடியாததால், மாதிரிகள் சூரத் இரத்த தான மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு இவரது ரத்த வகை EMM நெகட்டிவ் என கண்டிறியப்பட்டது.  பின்னர் இந்த ரத்த வகையை  இந்தியாவில் முதல் முறையாகவும், உலகில் பத்தாவது முறையாகவும் கண்டறியப்பட்டது. சர்வதேச இரத்த மாற்றுச் சங்கம் (ISBT) EMM நெகட்டிவ் என கூறியுள்ளது, ஏனெனில், ரத்தத்தில் EMM இல்லை.