நம்பிக்கை வாக்கெடுப்பும் வெளியேறிய பாஜகவும்.....!!!!

நம்பிக்கை வாக்கெடுப்பும் வெளியேறிய பாஜகவும்.....!!!!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு : 

ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. அங்கு முதலமைச்சராக இருக்கும் ஹேமந்த் சோரன், தனது பதவியை தவறாக பயன்படுத்தி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

அரசியல் நெருக்கடி : 

இதுதொடர்பான புகாரில், அவரது எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை இறுதி முடிவு எடுக்காததால், அம்மாநிலத்தில் பெரும் அரசியல் நெருக்கடி நீடித்து வருகிறது. இதனையடுத்து, சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முடிவு செய்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு : 

அதன்படி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ராய்ப்பூரில் இருந்து  புறப்பட்டு விமானம் மூலம் ராஞ்சி வந்தனர்.

81 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு 49 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன்:

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். 

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 48 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர்.
 
வேட்டையாடும் பாஜக:

எம்எல்ஏக்களை வேட்டையாடும் எதிர்க்கட்சியான பாஜகவின் முயற்சியே இந்த நடவடிக்கையைத் தூண்டியது என்று சோரன் கூறியுள்ளார்.

வெற்றிக்கு முன் சோரன்:

"எதிர்க்கட்சி ஜனநாயகத்தை அழித்துவிட்டது... சட்டமன்ற உறுப்பினர்களின் குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது.. எங்கள் பலத்தை சட்டசபையில் காட்டுவோம்" என்று சோரன் சட்டசபையில் கூறியிருந்தார்.

"மக்கள் சந்தையில் பொருட்களை வாங்குகிறார்கள், ஆனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குகிறது," என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

26 எம்எல்ஏக்களைக் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. 

இதையும் படிக்க: புதுமைப் பெண் திட்ட தொடக்க விழா...திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!