"நிர்மலா சீதாராமன் ஒரு போலி அமைச்சர்" ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம்!!

"நிர்மலா சீதாராமன் ஒரு போலி அமைச்சர்" ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம்!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு போலி அமைச்சர் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக சாடியுள்ளார். 

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இதனிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் கலைந்து சென்றதாக குற்றம் சாற்றியுள்ளார். மேலும், மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு போலி அமைச்சர்" என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக சாடியுள்ளார்.  
மேலும், நிர்மலா சீதாராமனின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக," எதிர்கட்சிகளின் குரல் மணிப்பூர் மற்றும் நாட்டின் ஒவ்வொரு வீட்டையும் எட்டியுள்ளது. மணிப்பூர் பிரச்சனையை எதிர்கட்சிகள் விடப்போவதில்லை. இவ்விவகாரத்தில் நாங்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறோம் என்றால், அதைக்கூட பாஜக அரசு செய்யவில்லை" என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக சாடியுள்ளார்.

இதையும் படிக்க || "மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் முதலைக் கண்ணீர்" நிர்மலா சீதாராமன்!!