முதன் முறையாக பஞ்சாபை கைப்பற்றும் ஆம் ஆத்மி கட்சி.. குஷியில் தலைமை!!

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் முதல்முறையாக ஆட்சியை பிடிக்கிறது.

முதன் முறையாக பஞ்சாபை கைப்பற்றும் ஆம் ஆத்மி கட்சி.. குஷியில் தலைமை!!

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு, கடந்த 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக என பலமுனை போட்டி நிலவிய இத்தேர்தலில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.  90 இடங்களுக்கு  மேல் ஆம் ஆத்மி கட்சி  முன்னிலை வகிப்பதாக அங்கு  ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 

துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் சிங் மான் அமோக  வெற்றி பெற்றுள்ளார்.  இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் மட்டும் முன்னிரை வகித்து   2-வது இடத்தில; உள்ளது. 

சாம்கவுர் சாஹிப், படாவூர் ஆகிய இருதொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்  சரண்ஜித் சிங் சன்னி, இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அம்ரீந்தர் சிங் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

இதேபோல், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப் காங்கிரஸ் கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தோல்வியை தழுவியுள்ளார்.