ஒமிக்ரான் எதிரொலி- உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து

ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் எதிரொலி- உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து

ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருவதுடன் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அல்லது வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்வரிசையில் தெலுங்கானாவில் உயர்நீதிமன்றங்களில் நேரடி விசாரணை முறை ரத்து செய்யப்பட்டு அனைத்து வழக்கு விசாரணைகளையும் காணொலி வாயிலாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் நேரடி விசாரணை முறை அல்லது காணொலி விசாரணை முறையை தேர்ந்தெடுக்கும் உரிமை நீதிபதிகளுக்கு உண்டு எனவும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.