இந்தியாவில் BA 2.75 என்ற புதிய வகை கொரோனா தொற்று - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் BA 2.75 என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் BA 2.75 என்ற புதிய வகை கொரோனா தொற்று - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் BA.4, BA.5 வகை மரபணு மாற்றம் பெற்ற தொற்று பரவி வருவதாகவும். இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் BA 2.75 என்ற தொற்று பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், BA 2.75 புதிய தொற்று இந்தியாவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும்  பகுப்பாய்வுத் தகவல்கள் தற்போது தான் கிடைத்ததாகவும் கூறினார்.

மரபணு மாறிய இந்த புதிய வகை தொற்று,  தடுப்பூசிக்கு கட்டுப்படுமா அல்லது தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.  தொடர் ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக கூறிய சவுமியா சுவாமிநாதன், பாதிப்பு உறுதியானால் ஆபத்தான தொற்று என்று அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.