சிபிஐ அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீட்டித்து அவசர சட்டம்...

சிபிஐ அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீட்டித்து அவசர சட்டம்...

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலங்களை 5 ஆண்டாக நீட்டித்து மத்திய அரசு இரு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது. லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் சட்டத்தின் அடிப்படையில்,  மத்திய புலனாய்வு துறை இயக்குனராக நியமிக்கப்படுவோருக்கு தேர்வு குழு  2 ஆண்டு பதவிக்காலம் வழங்கி வருகிறது. இதேபோல் அமலாக்கத்துறை இயக்குனரும் அதிகபட்சமாக இரு ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் நீடிக்க முடியும். இந்தநிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. அதில் இவ்விறு பதவிக்கான பதவிக்காலம் 5 ஆண்டுகளாக  நீட்டிக்கப்பட்டுள்ளது.