108 அடி உயரத்தில் 2000 கோடி ரூபாய் செலவில் ஆதி சங்கராச்சாரியார் சிலை  : மத்தியபிரதேச அரசு முடிவு!!

மத்திய பிரதேசத்தில் 108 அடி உயரத்தில் ஆதி சங்கராச்சாரியார் சிலை 

108 அடி உயரத்தில் 2000 கோடி ரூபாய் செலவில் ஆதி சங்கராச்சாரியார் சிலை  : மத்தியபிரதேச அரசு முடிவு!!

மத்திய பிரதேசத்தில் 2000 கோடி ரூபாய் செலவில் தத்துவஞானி ஆதி சங்கராச்சாரியார் சிலையை நிறுவ அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்  ஆலோசனை நடத்தியதாகவும், அதன்பின் இந்த அறிவிப்பினை வெளியிட்டதாகவும்  கூறப்படுகிறது. அதன்படி  108 அடி உயரத்திலான ஒற்றுமைக்கான சிலையாக ஆதி சங்கராச்சாரியார் சிலை அமையும் என்றும், இது 54 அடி உயர் மேடையில் பல உலோகங்களை கொண்டு அமைக்கப்படவுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் சர்வதேச அருங்காட்சியம் ஒன்றும் அமைய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருவது சந்தேகம் தான் என தெரிவிக்கும் காங்கிரஸ், ஏற்கனவே மாநிலம் பெரும் கடன் சுமையில் தத்தளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.