கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது..! 300 பன்றிகள் அழிக்கப்படும் என தகவல்..!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது..! 300 பன்றிகள் அழிக்கப்படும் என தகவல்..!

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் : 

உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, இந்த காய்ச்சல், பன்றிகளுக்கு தீவிரமாக பரவும்  தன்மை கொண்டது மற்றும் இது ஒரு கொடிய வகை வைரஸ் நோய் ஆகும். மேலும் இதன் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 

கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் : 

வயநாடு மாவட்டத்தின் மணந்தவாடிபகுதியில் உள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பன்றிகளின் மாதிரிகள், போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டது. 

அதிகாரிகள் தரப்பு விளக்கம் : 

இதுகுறித்து கால்நடை துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ஒரு பண்ணையில் உள்ள பன்றிகள் மொத்தமாக இறந்ததை அடுத்து, அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். தற்போது அதன் முடிவுகள் பெறப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொற்று பரவாமல்  இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பு நடவடிக்கை: 

இந்த மாத தொடக்கத்தில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும், உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கபட்டுள்ளது.