அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் - ராகுல்காந்தி அழைப்பு!

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் - ராகுல்காந்தி அழைப்பு!

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்யை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.  

விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெறுப்பு அதிகரித்துள்ளதாக கூறினார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாட்டை பிளவுப்படுத்தி அச்சத்தை உண்டு பண்ணுவதாக கூறிய ராகுல்காந்தி, இந்த அச்சம், வெறுப்பு மூலம் நாட்டில் இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே பயன்பெறுவதாக குறிப்பிட்டார்.  

இதையும் படிக்க: அதிமுகவை சிதைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள பாஜக: 2014 முதல் 2022 வரை ஒரு பார்வை

சீன விவகாரம், வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு குறித்து நாம் பேசமுடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், ஊடகங்கள், தேர்தல் ஆணையம், நீதித்துறையும் அழுத்தம் காரணமாக பேச இருப்பதாகவும் ராகுல்காந்தி கூறினார். ஆளும் மத்திய அரசுக்கு எதிராக பாத யாத்திரையை காங்கிரஸ் தொடங்க இருப்பதாக தெரிவித்த ராகுல்காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்யை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.