அமித்ஷா, சோனியா பாதுகாப்புப் பிரிவில் பெண் கமாண்டோக்கள்..? 

அமித்ஷா, சோனியாவுக்கான பாதுகாப்பு பிரிவில் முதன்முறையாக பெண் கமாண்டோக்கள்

அமித்ஷா, சோனியா பாதுகாப்புப் பிரிவில் பெண் கமாண்டோக்கள்..? 

அமித்ஷா, சோனியாவுக்கான பாதுகாப்பு பிரிவில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த அரசியல் தலைவர்களுக்கு சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த ஆண் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இதில் முதல் முறையாக பெண் கமாண்டோக்களை விரைவில் பணியமர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, இசட் பிளஸ் பாதுகாப்பை பெற்றிருக்கும் முக்கிய பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 32 பெண் கமாண்டோக்கள் அடங்கிய முதல் பிரிவுக்கு 10 வார பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கான பாதுகாப்பு பிரிவில் இந்த பெண் கமாண்டோக்கள் இடம்பெறவுள்ளனர். வருகிற ஜனவரியில் பெண் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.