அறிவியல் பூங்காவில் புதிதாக மீன் பண்ணை மற்றும் ரோபோக்கள் கேலரி..!!

குஜராத்தில் உள்ள அறிவியல் நகரத்தில், பார்வையாளர்களை கவரும் வகையில் அங்கு புதிதாக மீன்பண்ணை மற்றும் ரோபோக்களின் கேலரி உருவாக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவலை அடுத்து, தொடர் ஊரடங்கால் பலரும் வீடுகளுக்குள் முடங்கினர். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை மக்கள் பார்வையிடும் வகையில் அங்குள்ள அறிவியல் பூங்காவில் புதிதாக மீன் பண்ணை மற்றும் ரோபோக்கள் கேலரி, மற்றும் இயற்கை பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மீன் பண்ணையில் 188 வகையிலான 11 ஆயிரத்து 600 மீன்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், 79 வகையான ரோபாக்கள் சுற்றுலா பயணிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதந் நிர்வாக உயக்குனர் சுரம்யா வோரா தெரிவித்துள்ளார்.