இஸ்லாமியர் என்பதற்காகவே ஆர்யன் கான் குறி வைக்கப்படுகிறார்- மெகபூபா முப்தி கருத்து  

பாஜக அடிப்படை வாக்கு வங்கியின் குரூர விருப்பத்திற்காக ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்பட 8 பேர் மும்பை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் வெளிநாட்டவர் உள்பட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜாமின் கேட்டு ஆர்யன்கான் தாக்கல் செய்த மனுவை மும்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் ஆர்யன்கான் பெயரின் இறுதியில் கான் என முடிவதால் தான் அவர் குறிவைக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் அடிப்படை வாக்கு வங்கியின் குரூர விருப்பங்களை திருப்தி செய்வதற்காக முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.