எம்.பி. மீதான வழக்கை திரும்பப் பெறுங்கள்... போலீசாருக்கு அசாம்  முதல்வர் உத்தரவு...

மிசோரம்  நாடாளுமன்ற உறுப்பினர் வான்லால்வேனா மீதான வழக்கினை திரும்ப பெறும்படி அசாம் முதல்வர் அம்மாநில போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எம்.பி. மீதான வழக்கை திரும்பப் பெறுங்கள்... போலீசாருக்கு அசாம்  முதல்வர் உத்தரவு...

அசாம்- மிசோரம் எல்லையில் அண்மையில் 6 அசாம் காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இரு மாநிலங்கள் இடையே பதற்றம் நிலவியது. இப்பிரச்னைக்கு சுமூகமாக தீர்வுகாணும்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியதை தொடர்ந்து, இரு மாநிலங்களும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளன.

இதன் அடையாளமாக நேற்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா மற்றும் காவலர்கள் மீது போடப்பட்ட வழக்கினை மிசோரம் முதல்வர் சோரம்தங்கா திரும்பபெற்றார்.

இந்தநிலையில் நல்லிணக்கத்தின் அடையாளமாக, நாடாளுமன்ற வளாகத்தில் அச்சுறுத்தல் விடுத்ததாக மிசோரம் எம். பி வான்லான்வேனா மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெறும்படி அசாம் போலீசாருக்கு  முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் எல்லை தாக்குதலுக்கு காரணமான மிசோரம் காவலர்கள் மீதான வழக்கு திரும்ப பெறமாட்டாது என ஹிமாந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.