அசாம் முதலமைச்சர் மீது கொலை முயற்சி வழக்கு... மேலும் 7 பிரிவுகளில் வழக்குகள்...

இரு மாநில எல்லைப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது மிசோரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அசாம் முதலமைச்சர் மீது கொலை முயற்சி வழக்கு... மேலும் 7 பிரிவுகளில் வழக்குகள்...
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. சமீப காலமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதலில் அசாம் போலீசார் 6 பேர் பலியாயினர்.இ தனால் அசாம் - மிசோரம் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக மிசோரம் மாநிலத்தின் எம்.பி. க்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் மீது அசாம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா  மீது மிசோரம் போலீசார் கொலை முயற்சி , சதி திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் முதல்வரின் தனி அலுவக உயர் அதிகாரிகள் 6 பேர் மீதும், 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள வைரெங்டே காவல் நிலையத்தில் தான் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளது.