இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்....! இன்று வாக்குப்பதிவு...!

இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்....! இன்று வாக்குப்பதிவு...!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இமாச்சல பிரதேசத்தில், பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் இருந்து வருகிறார். இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சார பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நவம்பர் 10 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 

இந்நிலையில், இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 7 ஆயிரத்து 881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 55 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், இதற்காக 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக மாநில முழுவதும் 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. தொடர்ந்து இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இதையும் படிக்க : சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர்...! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...!