ஹார்ட்வேர் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி...! சிசிடிவி கேமிராவில் சிக்கிய இருவர்..!

புதுச்சேரியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர் ஹார்ட்வேர் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி...!

ஹார்ட்வேர் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி...! சிசிடிவி கேமிராவில் சிக்கிய இருவர்..!

புதுச்சேரி பாரதி வீதியில் ஹாட்வேர் கடை நடத்தி வருபவர் நேரு நகரை சேர்ந்த ஷர்ஃபுதின் (45). இவர் இன்று காலை தனது கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் அருகே உள்ள நகை அடகு கடையின் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, சுமார் 3 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி கையில் வைத்திருந்த இரும்பு ராட் மூலமாக கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த இரண்டு பூட்டுகளை, உடைத்து ஷட்டரை திறக்க முயற்சிக்கிறார். ஆனால் ஷட்டரை திறக்க முடியவில்லை.

மேலும் மற்றொருவர் மறைந்து கொண்டு கண்காணித்து கொண்டிருந்த போது, அவ்வழியே இரண்டு போலீசார் ரோந்து வந்ததை கண்ட மர்ம நபர்கள் அங்கயே மறைந்து கொள்வதும், பின்னர் போலீசார் சென்ற உடன் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களின் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. பின்னர் சிசிடிவி காட்சிகளுடன் ஷர்ஃபுதின் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.