பாஜக தேர்தல் அறிக்கை...!  5 கிலோ அரிசி அரை லிட்டர் பால் 3 சிலிண்டர்கள் இலவசம்...!!

பாஜக தேர்தல் அறிக்கை...!  5 கிலோ அரிசி அரை லிட்டர் பால் 3 சிலிண்டர்கள் இலவசம்...!!

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள், அரை லிட்டர் நந்தினி பால், 5 கிலோ அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் என கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இலவச அறிவிப்புகளை பாஜக அள்ளி வீசியுள்ளது.

கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதன்படி, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 சிலிண்டர்களும், பண்டிகை மாதங்களில் ஒரு நாளுக்கு அரை லிட்டர் நந்தினி பால், 5 கிலோ அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பட்டியலின பழங்குடியின பெண்களுக்கு இலவசமாக வைப்பு நிதி சேமிப்பு, விவசாயிகளுக்கு 80 சதவீதம்  மானியத்துடன் கூடிய சோலார் பம்ப் செட் உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதியோருக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலசவ முழு உடல் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்மட்டக் குழு பரிந்துரையின் பேரில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் விளைவித்த பொருட்களை 50 கிலோ வரை அரசு வாகனங்களில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிலை அறிக்கையின் போது வேளாண் துறைக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய், சுற்றுலாத்துறைக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதோடு, 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் கோயில்கள் புணரமைக்கப்பட்டு சுற்றுலாத்தளங்கள் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இலவச அறிவிப்புகள் தொடர்பாக காங்கிரசை பாஜக சாடி வந்த நிலையில் கர்நாடக தேர்தலையொட்டி அதே இலவச அறிவிப்புகளை பாஜக அள்ளி வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கும் கர்நாடக அதிமுக...!