மக்களுக்கு சேவையாற்ற அர்ப்பணிக்கப்பட்டது தான் பாஜக...!

மக்களுக்கு சேவையாற்ற அர்ப்பணிக்கப்பட்டது தான் பாஜக...!

குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்கள் மாநிலங்களின் சமநிலையை ஒருபோதும் கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் முழுவீச்சில் பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இதற்கிடையில் நேற்றைய தினம், மக்களை கவரும் வண்ணம் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம் செய்தார்.

இதையும் படிக்க : பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை!

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பைல்ஹோங்கல் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிய பிரதமர், பாஜக ஆட்சி  சமமான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக கூறினார். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள சாஹி குடும்பத்திற்கு உழைத்து வருவதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தனியார் நிறுவனம் என்றும் விமர்சித்தார்.

அதே வேளையில் பாஜக, கர்நாடக மக்களுக்கு  சேவையாற்ற அர்ப்பணிக்கபட்டுள்ளதாகவும், குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்கள் மாநிலங்களின் சமநிலையை ஒருபோதும் கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்றும் கூறினார்.