"I.N.D.I.A  கூட்டணியை கண்டு பாஜக பயத்தில் நடுங்குகிறது" மம்தா பானர்ஜி !!

"I.N.D.I.A  கூட்டணியை கண்டு பாஜக பயத்தில் நடுங்குகிறது" மம்தா பானர்ஜி !!

எதிர்க்கட்சிகள் கூட்டணியை அறிவித்தது முதல் பாஜக பயத்தில் நடுங்குவதாக மேற்குவங்க முதலமைச்சா் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் கடந்த மாதம் 23- ம் தேதி பீகாரின் பாட்னாவில் ஒத்த கருத்துடைய எதிர்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டனர். 

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது  ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  திட்டமிட்டபடி பெங்களூருவில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தனர். இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, " கலவரம், வன்முறை, மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமே வேலையாக வைத்திருக்கும் பாஜகவிற்கு எதிராக மக்கள் வாக்களித்து பாடம் புகட்டுவாா்கள்" எனக் கூறியுள்ளார்.  

மேலும், விரைவில் மத்தியில் ஆட்சி கவிழும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என குறிப்பிட்ட மம்தா பானா்ஜி, எதிர்க்கட்சிகள் கூட்டணியை அறிவித்தது முதல் பாஜக தோல்வி பயத்தில் நடுங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || நூதன முறையில் லாட்டரி விற்பனை... 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது!!