ஹேமந்த் சோரனைக் காப்பாற்ற நினைக்கிறாரா பாகேல்...!!!!!

ஹேமந்த் சோரனைக் காப்பாற்ற நினைக்கிறாரா பாகேல்...!!!!!
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஞாயிற்றுக்கிழமை ஜார்க்கண்டின் ஆளும் கட்சியின் எம்.எல். ஏ.க்களுக்கு விருந்தளித்த நிலையில் சிபிஐ நடத்திய சோதனைகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 
பா.ஜ.கவை எதிர்க்கும் பாகேல்:
 
பா.ஜ.க.வின் பெரிய தலைவர்கள் எதிர்ப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்வேறு யுக்திகளை கையாண்டு, தங்கள் அதிகாரத்தையும், பணத்தையும் பயன்படுத்தி பயமுறுத்துகின்றனர் என பாகேல் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்கு பா.ஜ.க வசம் நிறைய பணம் இருப்பதாகவும் பாகேல் கூறியுள்ளார்.
 
மக்கள் நலனில் அக்கறையில்லா அரசு:
 
நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர் எனவும் இதை இந்திய அரசு கவனத்தில் எடுத்து பணவீக்கத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என நினைக்கிறேன் எனவும் சத்தீஸ்கர் முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளைப் புறக்கணித்த அவர், ”ஒருவரைக் காப்பாற்ற நான் யார்? அவர்கள் என் அரசில் விருந்தினர்களாக வரவேற்கப்படுகிறார்கள்.” ஹேமந்த் சோரன் மற்றும் அவரது எம்எல் ஏக்களைக் காப்பாற்ற பாகேல் முயற்சிப்பதாக பாஜகவின் குற்றச்சாட்டுக்குப் பிறகு பாகேலின் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 
ஹேமந்தை காப்பாற்றுகிறேனா?
 
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் பாகேல் ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஜார்கண்ட் எம்எல் ஏக்களுக்கு வெளிப்படையாக விருந்தளித்ததால், வரும் நாட்களில் அமலாக்கதுறை மற்றும் வருமான வரித் துறை மூலம் ரெய்டு செய்யப்படலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.