விதிகளை மீறி செயல்பாடு... மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு தடை...

மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி

விதிகளை மீறி செயல்பாடு... மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு தடை...

விதிகளை மீறி செயல்பட்டதால் மாஸ்டர் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. ஜூலை 22 முதல் மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடுகளால், வங்கிகளால் புதிய மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. இருப்பினும், புதிய தடையால் ஏற்கனவே மாஸ்டர் கார்டை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்க வேண்டும் விதிகளுக்கு மாஸ்டர்கார்டு இணங்காதால் ரிசர்வ் வங்கி மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.