நெடுஞ்சாலை அடிக்கல் நாட்டு விழா: தெலங்கானா வரும் பிரதமர்; புறக்கணிக்கும் பாரதிய ராஷ்டிய சமிதி!

நெடுஞ்சாலை அடிக்கல் நாட்டு விழா: தெலங்கானா வரும் பிரதமர்; புறக்கணிக்கும் பாரதிய ராஷ்டிய சமிதி!

தெலங்கானா மாநிலத்தில் நாக்பூர் - விஜயவாடா நெடுஞ்சாலை திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். அவரது வருகையை புறக்கணிக்க தெலங்கானாவை ஆளும் பாரதிய ராஷ்டிய சமிதி முடிவு  செய்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக சத்தீஷ்கர், உத்தரபிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், சத்தீஷ்கர், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து, தெலங்கானா மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, நாக்பூர் – விஜயவாடா நெடுஞ்சாலை திட்டம் மற்றும் வாராங்கல்லில் மெகா ஜவுளி பூங்கா உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடியின் தெலங்கானா பயணத்தை புறக்கணிக்கப் போவதாக பாரதிய ராஷ்டிய சமிதி செயல் தலைவா் கே.டி. ராம ராவ் தொிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், பிரதமா் மோடி பதவியேற்ற நாளில் இருந்து தெலங்கானாவுக்கு எதிரான மனப்போக்குடன்தான் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினாா். மேலும் பேசிய அவா் அவரது தெலங்கானா விரோதப் போக்கைக் கண்டித்து அவரது வருகையைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தொிவித்தாா்.

இதையும் படிக்க:சென்னையில் 2 நாள் வேளாண் திருவிழா; இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!