கரும்பூஞ்சை நோய் மற்றவருக்கு பரவவில்லை: எனினும் இவர்களுக்கு பாதிப்பு அதிகம்!

தமிழகத்தில் கரும்பூஞ்சை பாதிப்பு ஒருவரிடம் இருந்து  மற்றவருக்கு பரவவில்லை எனவும், கொரோனா தொற்று பாதித்து, ஸ்டீராய்டு சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது என மருந்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. 

கருப்பு பூஞ்சை என்பது கொரோனா நோய் பாதித்த நபர்களுக்கு குணமடைந்த பின் ஏற்படும் பாதிப்பாக இருக்கிறது. இது ஒருவரிடமிருந்து பரவ கூடிய தொற்று இல்லை எனவும் சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பூஞ்சை பாதிப்பு நீரிழிவு நோய் மற்றும் சிகிச்சைகாக ஸ்டீராய்டு எடுத்தவர்கள் மத்தியில் இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக கோளாறு, காசநோய், எய்ட்ஸ் நோய் இருப்பவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நோய்க்கான அறிகுறிகள் தலைவலி, மூக்கில் ரத்த கசிவு, இருமலின் போது ரத்தகசிவு, கண்களை சுற்றி வீக்கமடைதல் போன்றவை தென்பட்டால் விரைந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வலியுறுத்தியுள்ளனர்.

கரும்பூஞ்சை வராமல் இருக்க நீராவி பிடித்தல், மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் கூடாது என அறிவுறுதப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து, ஆம்போடெரிசன் மருந்துகளை வழங்கி அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெறலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.