புதுச்சேரியில் மாசுக்கட்டுப்பாட்டுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்ட போகி பண்டிகை...

போகி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்த தேவையற்ற பொருட்கள் மக்கள் தீயிட்டு கொளுத்தினர்.

புதுச்சேரியில் மாசுக்கட்டுப்பாட்டுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்ட போகி பண்டிகை...

புதுச்சேரி | மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும், மறுநாள் பிறக்கும் தை திருநாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இதனையொட்டி போகி பண்டிகையான இன்று புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்தினர்.

மேலும்  மாசுக்கட்டுப்பாட்டு துறை சார்பில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் அதிக அளவில் எரிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | களை கட்டிய வார சந்தை... ரூ.8 கோடிக்கு மேல் வர்த்தகம் ...