தடுப்பூசி பலனையே தும்சம் பண்ணும் கொடிய கொரோனா சி.1.2. இதுவரை இந்தியாவில் கண்டறியப்படவில்லை!

தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் பரவ தொடங்கியுள்ள அதீத தொற்று பாதிப்பு தன்மை கொண்ட சி .1.2 திரிபானது இந்தியாவில் தற்போது வரை கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றானது அதன் புரத அமைப்பை மாற்றிக் கொண்டு மேலும் மேலும் அதீத வீரியத்துடன் திரிபடைந்து வருகிறது. அதன்படி  சி .1.2 என அழைக்கப்படும் புதிய திரிபு கடந்த மே மாதம் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுக்க பரவி வரும் டெல்டா மாறுபாட்டை காட்டிலும்  சி .1.2 திரிபானது கொடிய தொற்று தன்மையை கொண்டது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் 6 மாகாணங்களில் பரவி வரும் இந்த திரிபு காங்கோ, மொரிஷியஸ், போர்ச்சுகல், நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சி .1.2 திரிபானது இந்தியாவில் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.