காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேரின் இடைநீக்கம் ரத்து.. மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவிப்பு!!

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட 4 எம்பிகள் மீதான சஸ்பெண்ட நடவடிக்கை ரத்து செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேரின் இடைநீக்கம் ரத்து.. மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவிப்பு!!

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது முதல் பணவீக்கம் , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப் பி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப் பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

23 எம். பி.க்கள் இடைநீக்கம்:

இதனைடுத்து, அவையை செயல்படவிடாமல் தடுப்பதாக கூறி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 23 எம். பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் எம். பி.க்கள் 4 பேர் இடைநீக்கம்:

இதேபோல், மக்களவையில் கடந்த 25-ஆம் தேதி பதாகைகளை கைகயில் ஏந்தி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம். பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, உள்ளிட்ட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

எம் பிக்கள் போராட்டம்:

இதனைடுத்து, தங்களது இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எம் பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு:

இந்நிலையில், காங்கிரஸ் எம் பி ஜோதிமணி உள்ளிட்ட 4 மக்களவை எம் பிகள் மீதான சஸ்பெண்ட நடவடிக்கை ரத்து செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். மேலும், இனி பதாகைகளை கைகளில் ஏந்தி அமளியில் ஈடுபட்டால் இடைநீக்க நடவடிக்கை தொடரும் என்றும் சபாநாயகர் எச்சரித்திருக்கிறார்.