புற்றுநோய் திசுக்களை வித்தியாசமான முறையில் உடலில் இருந்து நீக்கிய அதிசயம்:

63 வயதான நோயாளிக்கு மின்சாரத் தீ மூலம், புற்றுநோய் திசுக்களை உடலில் இருந்து நீக்கியுள்ளனர் பூனே மருத்துவர்கள். மிகவும் வித்தியாசமான இந்த முறை, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புற்றுநோய் திசுக்களை வித்தியாசமான முறையில் உடலில் இருந்து நீக்கிய அதிசயம்:

63 வயதான முன்னாள் ராணுவ வீரர் ஒருவரது உடலில் காண்டுபிடிக்கப்பட்ட புற்றுந்நொய் திசுக்களை, முற்றிலும் வித்தியாசமான ஒரு முறை கொண்டு நீக்கியுள்ளனர். வெற்றிகரமாக நடந்த இந்த முறையால பல புதிய கதவுகள் திறக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

புனேவில் உள்ள ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியோ தொராசிக் சயின்சஸ் சுவாச மருந்துகளின் பிரிவு, 63 வயது மூத்த பாதிக்கப்பட்ட நபருக்கு எலக்ட்ரோ-காட்டரி என்ற மருத்துவ முறை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றி வெற்றிப் பெற்றுள்ளது.

கடந்த செவ்வாயன்று (19.07.2022), பாதுகாப்பு மூலம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்த செயல்முறையானது இராணுவ அறிவியல் நிலையில் உள்ள முதல் வகை என்று கூறப்பட்டிருந்தது. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின் படி, பாதிக்கப்பட்ட நபர், பல இணை நோய்களைக் கொண்டிருந்தார் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருமுறை நுரையீரல் புற்றுநோய் கொண்டதாக அடையாளம் காணப்பட்டு, சில மாதங்களில் இடது முதன்மை சுவாசப்பாதையை உள்ளடக்கிய பலவிதமான இணை நோய்களைக் கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ரத்தத்தைப் பரிசோதனை செய்தபின், கெனெரல் அனெஸ்திசிய உதவியோடு, 3 மணி நேர ரிஜிட் பிரோன்கோஸ்கோபி (Rigid Bronchoscopy) முறையை ஐந்து மருத்துவர்கள் செய்துள்ளனர். அதன் வழி, பாதிக்கப்பட்ட வீரரின், பழுதடைந்த அவரது இடது நுரையீறலில் உள்ள அனைத்து புற்றுநோய் திசுக்களையும் நீக்கிவிட்டதாக வெளியிட்ட அறிக்கைகள் கூறுகின்றன.

63 வயதான அந்த நோயாளிக்கு மின்சாரத் தீ மூலம், புற்றுநோய் திசுக்களை உடலில் இருந்து நீக்கியுள்ளனர் பூனே மருத்துவர்கள். மிகவும் வித்தியாசமான இந்த முறை, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.