சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை... ராம்தாஸ் அத்வாலே...

சாதிவாரியாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை... ராம்தாஸ் அத்வாலே...

நாட்டில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாட்டில் மக்கள் தொலை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்றும் இது பின்தங்கிய பிரிவினருக்கு பொருளாதார மற்றும் கல்வி அடிப்படையிலான பலன்களை பெற உதவும் எனவும் கூறினார்.

மேலும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள், அதன் நன்மைகளைப் பெறக்கூடிய வகையில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே அப்போது வலியுறுத்தினார்.

விதிகளின் படி இடஒதுக்கீட்டுக்கான அளவு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் ஆனால் சமூக நீதிக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறினார்.