மத்திய அரசின் அவசர சட்டம் : உச்சநீதிமன்றத்தை நாடியது டெல்லி அரசு.

மத்திய அரசின் அவசர சட்டம் : உச்சநீதிமன்றத்தை நாடியது டெல்லி அரசு.

டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. 

அதிகாரிகளின் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் தலையிடும் வகையிலும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் மத்திய அரசு டெல்லியில் அவசர சட்டம் அமல்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

தொடர்ந்து,  இதனை எதிர்க்க ஆதரவளிக்குமாறு பாஜக அல்லாத கட்சித் தலைவர்களை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வந்தார்.  

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவசர சட்டம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ள நிலையில், சட்டத்தை எதிர்த்து ஆம்ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதையும் படிக்க      | திருநங்கைக்கு குழந்தை தத்தெடுக்க அனுமதி மறுப்பு; மத்திய அரசுக்கு கெடு விதித்த உயர்நீதி மன்றம்!