மழைக்கால கூட்டத்தொடர்; அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

மழைக்கால கூட்டத்தொடர்; அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் 19ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

வரும் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. 17 அமர்வுகளாக மொத்தம் 23 நாட்கள் நடத்தப்பட இருக்கும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு புதிய மசோதாக்கள் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் மின்னனு தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. மேலும் பொது சிவில் சட்டம், தேசிய தலைநகர் எல்லை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.  

இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு, மத்திய புலனாய்வு துறையை தவறாக பயன்பத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பாதி நாட்கள் கூட்டம் நாடாளுமன்றத்தின் பழைய கட்டித்திலும், மீதிக் கூட்டம் புதிய கட்டிடத்திலும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூட்டத்தொடரை எதிர்கட்சிகளின் ஒத்துழைப்புடன் அமைதியாக நடத்த முற்படும் விதமாக வரும் 19 ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிக்க:போலி பாஸ்போர்ட் சர்ச்சை: உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபிக்கு எதிரான மனு; 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு!