காவிரி ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு.. எச்சரிக்கை!!

காவிரி ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு.. எச்சரிக்கை!!

கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போது உள்ள நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கரையோர மாவட்டங்களுக்கு அறிவுறுத்தல்

இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 80,000 கனஅடி நீர் வெளியேற்றம்

இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம்  கன அடி வரை வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

மேட்டூர் அணையில் இருந்து 1.85 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்

நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 அயிரம் கன அடி நீரும் 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 27 ஆயிரம் அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.