இறுதிச்சுற்றில் சந்திரயான் - 3...! இஸ்ரோவின் புதிய அப்டேட்..!

இறுதிச்சுற்றில் சந்திரயான் - 3...!  இஸ்ரோவின்  புதிய அப்டேட்..!

புவியின் இறுதி சுற்றுப்பாதையை சந்திரயான் 3 விண்கலம் அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில், சந்திரயான் 3 விண்கலமானது கடந்த 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில் புவியின் 5வது சுற்றுப்பாதையை அடைந்துள்ள சந்திரயான் 3 விண்கலம், அதிகபட்சம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 609 கி.மீ தூரத்திலும் குறைந்தபட்சம் 236 கி.மீ தூரத்திலும் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Chandrayaan-3 Updates: In what condition is Chandrayaan-3 now? ISRO gave  this latest information - Bollywood Wallah

இதையடுத்து நிலவுக்குச் செல்வதற்கான முதல் சுற்றுவட்டப்பாதைப் பணிகள், ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   | கடந்த ஆண்டை விட 11% குறைந்தது சாலை உயிரிழப்புகள் - போக்குவரத்து கூடுதல் ஆணையர்!