குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்கிறார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்கிறார்.

மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகா தீவிரம் காட்டி வரும் நிலையில், டெல்லி சென்ற தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அணைகட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். இந்நிலையில் அன்றைய தினமே பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கோரி பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், இன்று  2-வது முறையாக டெல்லி செல்கிறார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ள அவர், மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக குடியரசுத் தலைவரை சந்திப்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது