ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மாநில முதல்வர் உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மாநில முதல்வர் உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் 15 சதவீதத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு விகிதம் உள்ள மாவட்டங்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்படுவதாகவும், பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் 11 மாவட்டங்களுக்கு, தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்படுள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் பூங்காக்கள் காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.  ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.