ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா... ஆச்சரியத்தில் அமெரிக்க உளவுத்துறை...

சீனா நடத்திய ஹைப்பர்சோனிக் நியூக் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா... ஆச்சரியத்தில் அமெரிக்க உளவுத்துறை...

அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை கடந்த ஆகஸ்ட் மாதமே விண்ணிற்கு ஏவியதாகவும், குறைந்த சுற்றுப்பாதையில் பூமியை வட்டமிட்டு அதன் இலக்கை நோக்கி பயணித்ததாகவும், பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் 32 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே இலக்கை தவற விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் ஏவுகணை சோதனை முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும், ஆனால் ஆகஸ்ட் மாத சோதனை ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டதாகவும், பைனான்சியல் டைம்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் சீனாவின் முன்னேற்றம், அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.