எல்லை பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகை... அதிகளவில் தளவாடங்களை குவித்துள்ளதாக தகவல்...

இந்திய எல்லை பகுதியில் சீன ராணுவம் போர் பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எல்லை பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகை... அதிகளவில் தளவாடங்களை குவித்துள்ளதாக தகவல்...

கிழக்கு லடாக் பகுதியில் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக சீன ராணுவம் தனது துருப்புகளை நிலைநிறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்தியா தரப்பிலும் எல்லையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளின் துருப்புகளை திரும்ப பெற்று கிழக்கு லடாக்கில் அமைதியை ஏற்படுத்த ராணுவம் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இந்திய எல்லைக்கு அருகில் உள்ள சின்ஜியான் மலை சிகரத்தில் 16 ஆயிரம் அடி உயரத்தில் சீன ராணுவம் நேற்று இரவு போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் திபெத் இராணுவப் பகுதியில் இருந்து சின்ஜியாங் பகுதிக்கு துருப்புக்களைக் மாற்றிய சீனா, அங்கு அதிக எண்ணிக்கையிலான பீரங்கிகளை நிலைநிறுத்தி ராணுவ உள்கட்டமைப்புகளை பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.