காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு இன்றுடன் நிறைவு.. முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் மீது இன்று விவாதம்!!

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், முன்மொழியப்பட்ட தீர்மானங்களுக்கு காரிய கமிட்டி குழு இன்று ஒப்புதல் அளிக்கவுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு இன்றுடன் நிறைவு.. முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் மீது இன்று விவாதம்!!

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, கட்சியை மறுகட்டமைப்பு செய்திடும் வகையில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு என்ற மாநாட்டை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடத்தி வருகிறது.

இந்த கூட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இவை தவிர பொருளாதாரம், இளைஞர் நலன், விவசாயம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் தனித்தனியாக ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் துறை ரீதியான தீர்மானங்களை தயாரித்து வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில், 3-வது மற்றும் இறுதி நாளான இன்று, காங்கிரஸ் காரிய கமிட்டி குழு பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தவுள்ளது. இதில் ஒப்புதல் பெறப்பட்ட தீர்மானங்கள் மட்டும் கட்சி தலைமை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மாநாட்டின் முடிவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார்.