காங்கிரஸின் காரியக் கமிட்டி கூட்டம்...தலைவர் தேர்தலை அறிவிக்க வாய்ப்பு!

காங்கிரஸின் காரியக் கமிட்டி கூட்டம்...தலைவர் தேர்தலை அறிவிக்க வாய்ப்பு!

பெரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று கூடுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி:

கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு நாடாளுமன்றத் தேர்தல்களிலும்  அடுத்தடுத்து காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவிய நிலையில், மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Inauguration-of-the-Chief-Justice-of-the-Supreme-Court

தலைவர்கள் விலகல்:

கபில் சிபல், அமரிந்தர் சிங், சுனில் ஜாக்கர், அஸ்வினி குமார் உள்ளிட்டோர் வரிசையில் காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தும் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் கட்சியுடனான 50 ஆண்டு கால தொடர்பை முறித்துக்கொண்ட குலாம் நபி ஆசாத், முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

காரிய கமிட்டி கூட்டம்:

இந்நிலையில் காங்கிரசின் உச்சபட்ச அதிகாரம் மிக்க காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.  இந்த கூட்டதில் வெளிநாட்டில் இருந்தவாறே, சோனிய காந்தி, ராகுல், பிரியங்கா மூவரும்  காணொலி காட்சிகள் வழியாக கலந்து கொள்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.