பா.ஜ.க.வை வீழ்த்த புதிய முயற்சியில் காங்கிரஸ்... மெகா கூட்டணியை உருவாக்கத் திட்டம்...

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை உருவாக்கும் பணியில் ஈடுபடுவோம் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.வை வீழ்த்த புதிய முயற்சியில் காங்கிரஸ்... மெகா கூட்டணியை உருவாக்கத் திட்டம்...

மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை அடுத்தடுத்து வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. இரண்டு முறை மோடி பிரதமராக பதவி ஏற்று மிக வலிமையோடு திகழ்கிறார். அவரை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளால் மோடியை எதிர்க்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜக. -வை எதிர்க்க முடிவு செய்துள்ளார். மேலும், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க.-வை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். கடந்த வாரத்தில் மகாராஷ்டிரா சென்றிருந்த மம்தா பானர்ஜி சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நவாப் மாலிக், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை உருவாக்கும் பணியில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.