குஜராத் தேர்தல் களத்தில் இணைந்த காங்கிரஸ்..!! வெற்றி பெறுமா?!!

குஜராத் தேர்தல் களத்தில் இணைந்த காங்கிரஸ்..!! வெற்றி பெறுமா?!!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரைத் தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்டும் தற்போது குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம்:

குஜராத் சட்டசபை தேர்தல் தேதிகள் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்னரே பாஜக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது. 

ஆறு பொதுக்கூட்டங்களில் கெலாட்:

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்ஆறு பொதுக்கூட்டங்களை நடத்துவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலில் தஹோத் மாவட்டத்தில் உள்ள கர்படா மற்றும் ஜலோடில் இரண்டு பேரணிகளில் கெலாட் உரையாற்றியுள்ளார். இரண்டாம் நாள் அவர் தெற்கு குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள நவ்சாரியில் பேரணிகளில் உரையாற்றுவார் எனவும் இறுதியாக அவர் மூன்று பேரணிகளில் உரையாற்றுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்:

குஜராத்தில் 182 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  தற்போது பாஜக கட்சி ஆட்சியில் உள்ளது.  குஜராத் அரசின் பதவிக்காலம் பிப்ரவரி 23, 2023 அன்று முடிவடைகிறது.  இதனால் தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு 2017 சட்டமன்றத் தேர்தலிலும், இமாச்சல பிரதேச தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு சுமார் 13 நாட்களுக்குப் பிறகு, குஜராத் தேர்தல் தேதிய தேர்தல் ஆணையம் அறிவித்தது.  குஜராத் மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பாஜகவும் டிஆர்எஸ்ஸும் கூட்டணியா?? மக்கள் முன் அரசியல் நாடகம் செய்கின்றனரா?!! ராகுல் காந்தியின் விளக்கம்..!!!