ஐந்து மாநில தேர்தல்: வெற்றியை தீர்மானிக்கும் தனித் தொகுதிகள்!!

ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநிலங்களில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் தனித் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ,தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நிலையில் ஐந்து மாநிலங்களில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் தனித்தொகுதிகள் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.  

அந்த வகையில் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 39 தனித் தொகுதிகளும், மத்திய பிரதேசத்தில் 82 தனித் தொகுதிகளும், மிசோரமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகள் தனித்தொகுதிகளாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 59 தொகுதிகள் தனித்தொகுதிகளாகவும், 119 தகுதிகள் கொண்ட தெலங்கானாவில் 31 தனித் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒட்டு மொத்தமாக ஐந்து மாநிலங்களில் 679 பேரவை தொகுதிகளில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 250 தொகுதிகள் தனி தொகுதிகளாக இடம் பெற்றுள்ளன இதன் மூலம் ஐந்து மாநிலங்களின் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் தனித்தொகுதிகள் இடம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது