காஷ்மீரில் தொடரும் தாக்குதல்.. தீவிர கண்காணிப்பில் ராணுவம்...

காஷ்மீரில் தொடரும் தாக்குதல்.. தீவிர கண்காணிப்பில் ராணுவம்...

ஷோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் முன்ஜ் மார்க் பகுதியில்  இன்று காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.  இந்த மோதலில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  பாதுகாப்புப் படையினர் அந்த பகுதி முழுவதும் தடுப்புகளை அமைத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.  

கொல்லப்பட்ட மூன்று உள்ளூர் பயங்கரவாதிகளில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.  மூன்றாவது நபரை அடையாளம் காணும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அவர்களில் ஒருவர் காஷ்மீரி பண்டிட் புராண கிருஷ்ண பட் கொலையில் ஈடுபட்ட ஷோபியனின் லத்தீப் லோன் என்றும் மற்றொருவர் நேபாளத்தைச் சேர்ந்த தில் பகதூர் தாபாவின் கொலையில் தொடர்புடைய அனந்த்நாகின் உமர் நசீர் எனவும் தெரிவித்துள்ளனர்.  அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  குவாட் அமைப்பில் இணைகிறதா சீனா...இந்தியா எதிர்ப்பை தெரிவிக்குமா?!!