அக்., நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும் கொரோனா 3-வது அலை!

கொரோனா 3-வது அலை அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும் எனவும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருவதால் பெரிய அளவு பாதிப்பு இருக்காது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த இந்தக் குழு, கொரோனாவின் 3-வது அலை குறித்து கணித்துள்ளது. அதன்படி கொரோனாவின் மூன்றாவது அலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சமடையும் எனக் குறிப்பிட்டுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருவதால், பெரிய பாதிப்பு ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், மூன்றாவது அலையின் போது தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை அதிகரிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.