அப்பாடா.. கொரோனா 4வது அலை வர வாய்ப்பு இல்லையாம் - குட் நியூஸ் சொன்ன பிரபல நச்சு உயிரியல் நிபுணர்

இந்தியாவில் கொரோனா 4வது அலை வர வாய்ப்பில்லை என பிரபல நச்சு உயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அப்பாடா.. கொரோனா 4வது அலை வர வாய்ப்பு இல்லையாம் - குட் நியூஸ் சொன்ன பிரபல நச்சு உயிரியல் நிபுணர்

இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா தொற்றின் மூன்றாம் அலை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இதைத்தொடர்ந்து 4ம் அலை வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி தொடங்கி அக்டோபர் 24-ம் தேதி வரை நீடிக்கும் என கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கொரோனா உச்சம் அடையும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் 4-ம் அலை வராது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நச்சு உயிரியல் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை முடிவுக்கு வந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் இன்னும் 4 வாரங்கள் தொற்றின் தாக்கம் இருக்கும் எனவும் தெரிவித்தார். கொரோனா வைரசில் மாறுபாடு வராத வரையில், கொரோனாவின்  4வது அலை ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.