மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி... எகிறி அடிக்கும் கொரோனா!

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி... எகிறி அடிக்கும் கொரோனா!

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களால் முடிந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் மாநில அரசுகள், போதிய கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில், ஓமிக்ரான் ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து அமைச்சர்களுக்கும் ,எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அஜித் பவார், மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அம்மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.