கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நீட்டிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நீட்டிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஒவ்வொரு மாநிலங்களும் சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன. இன்னமும் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.  இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா கட்டுப்பாடுகளை ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.  இதைத்தொடர்ந்து அவர் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றை நிர்வகிப்பதற்கு பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், கொரோனா கால பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகிய 5 அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் பண்டிகை காலங்களை கவனத்தில் கொண்டு, கூட்டம் கூடுகிற இடங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.