இளம் தலைமுறையினரை அதிகளவில் தாக்கும் கொரோனா: ஆய்வில் கண்டுபிடிப்பு!

கொரோனா 2வது அலையில் 40 வயதுக்கும் கீழான இளம் தலைமுறையினரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இளம் தலைமுறையினரை அதிகளவில் தாக்கும் கொரோனா: ஆய்வில் கண்டுபிடிப்பு!

கொரோனா 2-வது அலையில் 40 வயதுக்கும் கீழான இளம் தலைமுறையினரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், எய்ம்ஸ் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன இணைந்து கொரோனா தொடர்பான என்சிஆர்சி தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தி அதன் முடிவினை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல்  நடப்பாண்டு மே 11 வரை, 40 மருத்துவமனைகளில் பதிவான 18 ஆயிரத்து 961 கொரோனா நோயாளிகளின் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவில் முதல் அலையை காட்டிலும் 2-வது அலையில் கூடுதலாக 3 புள்ளி 1 சதவீதம் பேர் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2-வது அலையில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட எவ்வித வியாதியுடனும் தொடர்பில்லாத இளம் தலைமுறையினரே பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 20 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் தொற்றுக்கு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.